யாழில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை - கடற்தொழில் அமைச்சர் எடுத்த விசேட நடவடிக்கை

காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் களஞ்சியத்திலிருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படும் என யாழ் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் களஞ்சியமானது வழமைபோல் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும் நிலையிலும் இன்றைய தினம் விசேடமாக களஞ்சியத்தினைத் திறந்து எரிபொருள் நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகத்தினை மேற்கொள்ளுமாறு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி. ஜே. ஏ. எஸ். டி. எஸ். ராஜகருணாவிடம் நேற்று இரவு கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.
அதற்கமைவாக, பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவரின் அறிவுறுத்தலுக்கமைவாக - இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகிக்க வட பிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது என யாழ் மாவட்ட செயலக ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.




