வவுனியாவில் விபத்து - தடைப்பட்ட போக்குவரத்து

வவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற விபத்து காரணமாக இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு லொறிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நேருக்குநேர் மோதி இந்த விபத்து நடந்துள்ளது.
குறித்த விபத்து காரணமாக சுமார் மூன்று மணிநேரம் யாழ் - கண்டி வீதியின் போக்குவரத்து தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







