SuperTopAds

ரஜினிகாந்த் 173 படத்தின் அப்டேட்!

ஆசிரியர் - Editor IV
ரஜினிகாந்த் 173 படத்தின் அப்டேட்!

ஜெயிலர் 2, தலைவர் 173, தலைவர் 174 என மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 மற்றும் தனது 174வது படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தலைவர் 174 படத்தின் புரோமோ வீடியோ செம மாஸாக வெளிவந்தது. இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து கமல் - ரஜினி இணைந்து நடிக்கிறார்கள். இதுவே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.     

ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 173வது படத்தில் நடிக்கவுள்ளார். கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.

இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு மகனாக மலையாள நடிகரும், இயக்குநருமான பேசில் ஜோசப் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பராசக்தி படத்தில் கேமியோ ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.