SuperTopAds

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்கள்

ஆசிரியர் - Editor II
ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்கள்

கொழும்பு - ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நபர் மன்னாரைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞர் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய முஜாஹித்  முஹம்மது சஹ்ரின் என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞர்  கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும், சம்பவ தினம் தலை முடி வெட்ட சிகை அலங்கரிப்பு நிலையம் சென்ற நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

துப்பாக்கி சூட்டுக்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாதாள உலகக் குழுக்களுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.