SuperTopAds

மன்னாரில் மீட்கப்பட்ட படகில் ஹஷிஷ் போதைப்பொருள்

ஆசிரியர் - Editor II
மன்னாரில் மீட்கப்பட்ட படகில் ஹஷிஷ் போதைப்பொருள்

மன்னார் தெற்கு கடலில் கையகப்படுத்தப்பட்ட படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை உறுதியாகியுள்ளது. 

மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் படகொன்றைக் கடற்படையினர் இன்றைய தினம் சனிக்கிழமை கையகப்படுத்தியிருந்தனர். 

அத்துடன் அந்தப் படகில் இருந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

குறித்த படகிலிருந்து போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு பொதிகள் மீட்கப்பட்டிருந்தன அவற்றில் 50 கிலோகிராமை விட அதிகமான ஹஷிஷ் போதைப்பொருள் உள்ளமை தெரியவந்துள்ளது. 

 கைது செய்யபட்ட இரண்டு சந்தேகநபர்களும், ஹஷிஷ் போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.