SuperTopAds

அல்லைப்பிட்டியில் படுகொலையான சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம்

ஆசிரியர் - Editor II
அல்லைப்பிட்டியில் படுகொலையான சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம்

அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொவை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.

அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து “பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது” என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 உடலம் நவாலி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.