SuperTopAds

கஞ்சாவுடன் வவுனியாவில் இருவர் கைது

ஆசிரியர் - Editor II
கஞ்சாவுடன் வவுனியாவில் இருவர் கைது

வவுனியாவில் 22 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

வவுனியா  பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பட்டானிச்சூர் பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் குழுவினர் கப்ரக வாகனம் ஒன்றை வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர்.  

இதன்போது குறித்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் கஞ்சா கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த வாகனத்தில் இருந்த இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், அதில் இருந்த 22 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டது. 

குறித்த கஞ்சா போதைப்பொருள் மன்னாரிலிருந்து திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. 

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்