SuperTopAds

யாழ் - கண்டி வீதியில் சுரங்கப்பாதை

ஆசிரியர் - Editor II
யாழ் - கண்டி வீதியில் சுரங்கப்பாதை

கண்டி-யாழ்ப்பாணம் வீதியில் (A9) மஹையாவ சுரங்கப்பாதையின் நிர்மாணப் பணிகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் 699.6 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இந்த சுரங்கப்பாதையின் நிர்மாணப் பணிகள், எதிர்வரும்  273 நாட்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், கண்டி மாவட்ட மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.