SuperTopAds

உலக பெருமஞ்சத்தில் வெளிவீதியுலா வந்த இணுவை கந்தன்

ஆசிரியர் - Editor II
உலக பெருமஞ்சத்தில் வெளிவீதியுலா வந்த இணுவை கந்தன்

இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப் பெருமஞ்சம் வீதியுலா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, ஆறுமுகசுவாமி , வள்ளி தெய்வானை சமேதரராய் , உலக பெருமஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

தைப்பூச தின உலக பெருமஞ்ச வீதியுலாவின் போது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ,  வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்த பெரும்பாலானவர்கள் மஞ்ச திருவிழாவில் கலந்து கொண்டனர்.