மாணவர்களுக்கு போதை லேகியம் விற்பனை செய்தவர் கைது

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதை தரும் லேகியம் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை ஹற்றன் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
அதன் போது, சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை போதை உருண்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வட்டவளை பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தேடுதல் நடத்திய போது இந்த லேகியங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




