மன்னாரில் காற்றாலை மின்நிலையத்தை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி

CEYLEX Renewables நிறுவனத்தினால் மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட, 20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட 'மன்னார் விண்ட்ஸ்கேப்' (WINDSCAPE MANNAR) காற்றாலை மின்நிலையத்தை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வில் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கலந்து கொண்டிருந்தார்.
இலங்கை வரலாற்றில் அரச அல்லது தனியார் துறையின் கீழ் 05 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட காற்று விசையாழிகள் (Turbines) பயன்படுத்தி நிறைவு செய்யப்பட்ட முதல் காற்றாலையாக அமைவதுடன், முழுமையான உள்நாட்டு நிறுவனத்தினால் இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தியால் நாட்டை வலுப்படுத்துவதற்காக இந்த தனித்துவமான திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, CEYLEX Renewables நிறுவனத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.










