ஜனாதிபதியின் வருகையை ஒட்டி அவசர அவசரமாக வீதிகளில் உள்ள குழிகள் மூடப்படுகின்றன

ஜனாதிபதியின் வருகையையொட்டி மன்னார் வீதியில் காணப்படுகின்ற பாரிய குழிகளை நிரப்பி செப்பனிடும் பணி அவசரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மன்னார் தபாலகத்தில் இருந்து செத்பார் செல்லும் பிரதான வீதி நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்படும் நிலையில், குறித்த வீதியை புனரமைப்பு செய்ய பல தரப்பினரால் கோரிக்கை முன் வைக்கப்பட்ட போதிலும் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை.
இந்த நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி, மன்னாரிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் குறித்த வீதியை செப்பனிடும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.
மன்னருக்கு எதிர்வரும் வியாழக்கிழமை விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி காற்றாலை மின் கோபுர திறப்பு விழா மற்றும் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.




