SuperTopAds

வர்த்தகரை கொலை செய்ய திட்டம்: துப்பாக்கியுடன் நால்வர் கைது!

ஆசிரியர் - Editor II
வர்த்தகரை கொலை செய்ய திட்டம்: துப்பாக்கியுடன் நால்வர் கைது!

வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை மட்டக்குளி பகுதியில் வைத்து கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வர்த்தகரை கொலை செய்யும் நோக்கில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முன்னதாக  கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரிவோல்வர் ரக கைத்துப்பாக்கி ஒன்றும், 6 தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

அவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் அவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.