SuperTopAds

இலங்கை, பாகிஸ்தான் இரண்டாவது டி-20 போட்டி கைவிடல்

ஆசிரியர் - Editor IV
இலங்கை, பாகிஸ்தான் இரண்டாவது டி-20 போட்டி கைவிடல்

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது.

இன்று மாலை 7.00 மணியளவில் தம்புள்ளையில் இந்த போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையில், தொடர்ந்து மழை பெய்து வந்துள்ளது. 

எனவே போட்டி தற்போது ஒரு பந்தேனும் வீசப்படாத நிலையில் தற்போது கைவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.