SuperTopAds

பிணையில் வெளியே வந்த டக்ளஸ் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

ஆசிரியர் - Editor II
பிணையில் வெளியே வந்த டக்ளஸ் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

என்னை கைது செய்ததால் மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை உணர்ந்து கொள்கிறேன். என்றும் எனது அரசியல் பயணம் தடையின்றி தொடரும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட நிலையில் , கம்பஹா நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

பிணையில் வெளியே வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

என்னை திடீரென கைது செய்ததன் காரணமாக எனது மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் கவலையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

இன்று நான் விடுவிக்கப்பட்டிருக்கின்றேன். இவ்வேளையில் நாட்டினுடைய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்காவிற்கு நன்றி. அதேபோன்று எனது தரப்பு  உண்மைகளை எடுத்துரைத்த  ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்க்கும் அவரது குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.