வவுனியாவில் இளம் தம்பதியினர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் தம்பதியினரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அதேபகுதியை சேர்ந்த கிருசாந்தன்(22) நிசாந்தினி(19) ஆகிய இளம் தம்பதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
புதுவருடதினமான இரவு குறித்த கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து இருவரும் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்துள்ளனர்
சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




