நுவரெலியாவிற்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

டிட்வா சூறாவளியால் நுவரெலியாவில் ஏற்பட்ட அனர்த்தங்களின் பின்னர் தற்போது சீரான காலநிலை நிலவி வருவதால் அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்பட்டது.
நுவரெலியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பின்னர் முக்கிய சுற்றுலா பகுதியைச் சுற்றி பல புதுப்பித்தல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் பல்வேறு பன்முக பண்புகளை கொண்ட கிரகறி வாவியில் நாட்டில் நிலவிய மோசமான காலநிலையால் படகு சவாரி முற்றாக நிறுத்த நடவடிக்கைகள் எடுத்தனர்.
அந்நிலையில் பழுதடைந்த படகுகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டதை அடுத்து 20 நாட்களுக்கு பிறகு படகு சவாரி மீண்டும் தொடங்கியுள்ளனர்.




