மொடலிங் துறையில் சர்வதேச ரீதியில் சாதனை படைத்த யாழ். இளைஞர்!

ஹரன் ரமின்ஷன் ஆகிய இவர் இன்று Modeling துறையில் சாதணை படைத்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் பிலிப்பைன்ஸ் மனிலா நகரில் நடைபெற்ற MISTER GLAM INTERNATIONAL 2025 Modeling போட்டியில் பங்கு பற்றி இருந்தார். கனடா, லண்டன், மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், ஜேர்மன், பிலிப்பைன்ஸ், யப்பான் என 35 ற்கும் மேற்பட்ட Modeling கலாச்சாரத்துடன் இணையான நாடுகளுடன் இணைந்து கலாச்சார வளம் மிக்க நாடாகிய இலங்கையின் ஆவரங்கால் என்ற ஊரைச் சோர்ந்த 20 வயதான இவ் இளைஞன் சென்று TOP 10 க்குள் தெரிவாகி இரண்டு பதக்கம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இது பெருமைக்குரிய, மற்றும் பாராட்டுக்குரிய விடயமாகும். சாதிப்பதற்கு பல துறைகள் இருந்த போதிலும் இத்துறையில் அதீத ஆர்வமும் ஈடுபாடும், விருப்பமும் கொண்டு தனி ஒரு ஆளாக சாதித்துள்ளார். இது மட்டும் இன்றி வாக்குகளின் அடிப்படையில் முதலாவதாக நின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நிறைய மக்களிடமும், பத்திரிகையாளர்களிடமும், மற்றும் சமூக ஊடகங்களிடமும் சென்றடையாததே இவர் இறுதி நேர வாக்களிப்பில் பின் தங்கி இருந்தமைகான காரணம் ஆகும். இதனால் இவருக்கு TOP 04 Runner up எனும் Award இவர் கையை விட்டுப் போனது. எனினும் இவர் தனது கடின உழைப்பால் இரண்டு பதக்கங்களைப் பெற்றார். இத்துடன் இவரது பயணம் நிற்கப்போவது இல்லை. தொடர்ந்தும் பல போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கின்றார்.அதற்கு மக்களாகிய நீங்கள் உங்கள் பெரும் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.. இவர் பல விதமான போட்டிகளில் பங்கு பற்றி உள்ளார் என்பதை நீங்கள் இவரது Stylo Rami என்ற instagram அல்லது Face Book மூலம் பார்வையிட முடியும். இதுவரையில் எத்தனையோ பேர் என்னென்னவோ துறையில் சாதித்துள்ளார்கள். அது போல இவரும் முதன் முதலாக நாடுவிட்டு நாடு சென்று இரு பதக்கங்கள் ஜெயித்து இந்த மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு நாமும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
இனிவரும் போட்டிகளிலும் பல பதக்கங்களைப் பெற்று இந்த நாட்டுக்கும் இந்த மண்ணுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று எங்கள் சார்பாகவும் மக்கள் சார்பாகவும் கேட்டுக் கொள்கின்றோம். அதே போல இத்துறையில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இவர் ஒரு முன்மாதிரியாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.




