டக்ளஸ், சிறிநேசன் நாடாளுமன்ற வருகையில் சாதனை! - நாமல், வசந்த சேனநாயக்க மோசம்

ஆசிரியர் - Admin
டக்ளஸ், சிறிநேசன் நாடாளுமன்ற வருகையில் சாதனை! - நாமல், வசந்த சேனநாயக்க மோசம்

கடந்த மே மாதம் தொடக்கம் ஜூலை மாதம் வரை 24 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு தொடர்பான பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 224 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 12 பேர் மாத்திரமே 24 நாட்களும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், 24 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றத்துக்கு வந்து நாமல் ராஜபக்ஸ, மற்றும் அமைச்சர் இராஜாங்க வசந்த சேனநாயக்க ஆகியோர் மோசமான சாதனை படைத்துள்ளனர்.

24 நாட்களும் நாடாளுமன்றத்துக்கு வந்து சாதனை படைத்த 12 பேரில், தமிழ் எம்.பிக்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஞானமுத்து சிறிநேசன் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 23 நாட்கள் நாடாளுமன்றுக்கு வருகைத்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு