SuperTopAds

கண்டி மண்சரிவு: 31 பேரின் இறுதிச் சடங்குகள் நிறைவு

ஆசிரியர் - Editor II
கண்டி மண்சரிவு: 31 பேரின் இறுதிச் சடங்குகள் நிறைவு

கடந்த 27ஆம் திகதி பெய்த கடும் மழை காரணமாக கண்டி, உடத்தவ, நெலும்மல  பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேரின் இறுதிச் சடங்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 

யாரும் எதிர்பாராத ஒரு கணத்தில், மலை உச்சியில் இருந்து சுமார் 5 கிலோமீற்றர் தூரத்திற்குச் சரிந்து விழுந்த பாரிய மண் மேடு இந்த கிராமத்தை முழுமையாக மூடியிருந்தது. 

அதில் பலர் காணாமல் போன நிலையில் 31 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் இறுதி சடங்குகள் நடைபெற்றன. 

காணாமல் போனோரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது