SuperTopAds

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுப்பு - 121 பேரின் உயிர்களைக் காப்பாற்றிய விமானப்படை

ஆசிரியர் - Editor II
மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுப்பு - 121 பேரின் உயிர்களைக் காப்பாற்றிய விமானப்படை

மாவிலாறு அணைக்கட்டு உடைந்தமையினால் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் நடவடிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயற்படுத்தப்படுகின்றது. 

இதுவரையில் விமான நடவடிக்கைகள் மூலம் 121 பேரின் உயிர்களைக் காப்பாற்ற முடிந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

மூதூர் மற்றும் நீலபொல பிரதேசங்களில் உள்ள மக்களை நேற்று இரவே வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்துள்ளது. 

கிண்ணியா நகரம் தற்போது முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், சிலர் மரங்களுக்கு மேலே ஏறி தமது உயிர்களைப் பாதுகாப்பதாகவும், அவர்களை மீட்க கடற்படை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாவிலாறு அணைக்கட்டு உடைந்தமையால் சோமபுர, சிறிமங்கலபுர, கல்யார், தெஹிவத்த ஆகிய பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பிரதேச மக்கள் தற்போது சேருநுவர நவோத்யா பாடசாலைக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் சேருவாவில ராஜமஹா விகாரையின் பாதுகாப்பான இடமொன்றில் தற்காலிகமாக தங்கவைக்கப்படவுள்ளனர்.