SuperTopAds

வவுனியாவில் காரொன்றில் இருந்து பெண் உள்ளிட்ட இருவர் சடலமாக மீட்பு

ஆசிரியர் - Editor II
வவுனியாவில் காரொன்றில் இருந்து பெண் உள்ளிட்ட இருவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் வவுனியா, சாந்தசோலை பகுதியில் ,நீரில் அடித்துச் சென்ற நிலையில் கார் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், அதன் உள்ளே இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் வெள்ள நீரில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டுள்ளதை அவதானித்த கிராம மக்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலினை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இராணுவம் மற்றும் பொலிஸார் கிராம இளைஞர்களுடன் இணைந்து குறித்த காரினை மீட்டுள்ளனர்.

அதன் போது காரினுள் இருந்து ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை குறித்த வீதியானது சீரற்ற காலநிலையால் வெள்ளநீர் வீதியை மூடி செல்வதன் காரணமாக நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு முதல் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது