SuperTopAds

இரணைமடு குளத்திற்கு நீர் வரத்து அதிகரிப்பு - குளத்தின் கீழ் பகுதியில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவிப்பு

ஆசிரியர் - Editor II
இரணைமடு குளத்திற்கு நீர் வரத்து அதிகரிப்பு - குளத்தின் கீழ் பகுதியில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவிப்பு

இரணைமடுக்குளத்தின் நீரேந்து பிரதேசங்களிலிருந்து நீர்வரத்து  அதிகரித்துள்ளதால், மேலதிக நீரை வெளியேற்ற குளத்தின் வால்கட்டுப்பகுதியினை வெட்டிவிட வேண்டிய நிலமை ஏற்படலாம் அதனால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு மாவட்ட செயலர் கோரியுள்ளார். 

36 அடி நீர்கொள்ளளவுடைய இரணைமடுக்குளமானது தற்போது 36 அடி நீர் கொள்ளளவை எட்டியுள்ளது.

இன்று காலை முதல் முழுமையான அளவு அனைத்துவான் கதவுகளும் திறந்துவிட்டிருந்த நிலமையிலும் குளத்தின் கொள்ளளவினை தாண்டி  நீரேந்து பிரதேசங்களிலிருந்து நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.

இந் நிலமையினை கருத்தில் கொண்டு குளத்தின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அதன் வால்கட்டுப்பகுதியினை வெட்டி மேலதிக நீரினை விரைவாக வெளியேற்ற வேண்டிய சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது.

எனவே குளத்தின் கீழ் பகுதிகளில் வாழும் மக்கள் குறிப்பாக இராமநாதபுரம், வட்டக்கச்சி ,மாயவனூர் மற்றும் ஏனைய பிரதேசங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் அபாய பிரதேசங்களில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இது தொடர்பிலான மேலதிக விபரங்கள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட செயலர் அறிவித்துள்ளார்.

Radio