A9 வீதி மூடப்பட்டது

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை வீதிப்போக்குவரத்து ஓமந்தையோடு தடை செய்யப்பட்டுள்ளது.
வடக்கிலிருந்து செல்லும் ரயில் சேவை, அநுராதபுரத்தோடு நிறுத்தப்பட்டுள்ளது. வடக்கு நோக்கிய சேவை குருநாகலோடு நிறுத்தப்பட்டுள்ளது.
மோசமான காலநிலையடுத்து யாழ்ப்பாணம்- சென்னை Indigo விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
வெளியிடங்களுக்கு சென்றவர்கள் அடுத்துவரும் சில நாட்களுக்கு அந்தந்த இடங்களிலேயே பாதுகாப்பாக தங்கியிருப்பதே பொருத்தமானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.




