கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழப்பு

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்துள்ளார்
ஸ்கந்தபுரத்தை சேர்ந்த கதிரவேலு சிவராசசிங்கம் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார்.
அதனை அடுத்து, மனைவியை தாக்க முற்பட்ட கணவனை, தனது மகளை தாக்க முற்பட்ட மருமகனை தடுக்கச் சென்ற மாமனாரே தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
மகளின் கணவனின் தாக்குதலுக்கு இலக்கானவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளை வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவரது சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக அக்கராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.




