யாழ். உடுப்பிட்டியில் தனித்திருந்த வயோதிபத் தம்பதிக்கு நேர்ந்த அவலம்

ஆசிரியர் - Admin
யாழ். உடுப்பிட்டியில் தனித்திருந்த வயோதிபத் தம்பதிக்கு நேர்ந்த அவலம்

யாழ். உடுப்பிட்டியில் வீட்டின் கூரை பிரித்து உள்ளே புகுந்த கொள்ளைக் கும்பல் வயோதிபத் தம்பதியினரை வாளால் வெட்டிப் படுகாயப்படுத்திய பின் பெருமளவு பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை(12) அதிகாலை ஒரு மணியளவில் குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உடுப்பிட்டியின் சந்நிதி கோவில் வீதி வாசிகசாலைக்கு அருகில் தனித்திருந்த வயோதிபத் தம்பதியினரின் வீட்டை இலக்கு வைத்து அதிகாலை ஒரு மணியளவில் உட்புகுந்த குறித்த கொள்ளைக் கும்பல் அதிகாலை நான்கு மணி வரை மேற்படி வீட்டில் தங்கியிருந்து கொள்ளையடித்துள்ளனர்.

கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த வயோதிபத் தம்பதியினராகிய கணவன், மனைவி ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே உடுப்பிட்டிப் பகுதியில் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தை உள்ளடக்கி நடைபெறும் கொள்ளைகள் தொடர்பில் உடுப்பிட்டி மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.ஏற்கனவே, அண்மையில் வயோதிபத் தம்பதியொன்றின் 47 இலட்சம் பணம் கொள்ளையிடப்பட்டு ஒரு மாதம் கூட கடந்திருக்காத நிலையிலேயே மேற்படி கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

வல்வெட்டித்துறை காவல்துறையினரது திறமையின்மை அல்லது அசட்டையீனம் காரணமாகவே கொள்ளைகள் அரங்கேறுகின்றனவா? எனக் கேள்வியெழுப்பியுள்ள உடுப்பிட்டி நலன்புரி அமைப்பு மற்றும் பொது அமைப்புக்கள் காவல்நிலையத்தில் இல்லாத பொறுப்பதிகாரியை வைத்துக்கொண்டு எவ்வாறு சட்டமொழுங்கைப் பாதுகாக்க முடியும்? எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு