SuperTopAds

சூர்யாவின் 47ஆவது திரைப்படத்தின் நடிகை இவரா?

ஆசிரியர் - Editor IV
சூர்யாவின் 47ஆவது திரைப்படத்தின் நடிகை இவரா?

நடிகர் சூர்யாவின் 47ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

 சூர்யா அடுத்ததாக ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 

இத்திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சூர்யா நடிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 சூர்யாவின் 47ஆவது திரைப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி கேரளத்தில் ஆரம்பமாகவுள்ளதாகவும் இதில் நடிகர்கள் நஸ்ரியா மற்றும் நஸ்லன் உள்ளிட்டோர் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.