சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவ.19, 20ல் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மழைக்கு, வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அறிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை முதல் நவ.23ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது




