கிளிநொச்சியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி தட்டுவான் கொட்டி பகுதியில் இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




