SuperTopAds

வீதி விபத்தில் தீப்பிடித்து எரிந்த கார்- கருகிய நிலையில் ஓட்டுநர் உடல்

ஆசிரியர் - Editor IV
வீதி விபத்தில் தீப்பிடித்து எரிந்த கார்- கருகிய நிலையில் ஓட்டுநர் உடல்

திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் அதிவேகமாக சென்ற கார், சாலை தடுப்புச் சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்ததில் கருகிய நிலையில் ஓட்டுநர் உடல் மீட்கப்பட்டது.

குறித்த சம்பவம் புதுக்கோட்டையில் மனைவியை பார்த்துவிட்டு திரும்பும் வழியில் விபத்து நடந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சொகுசு காரை ஒருவர் அதிவேகமாக ஓட்டிச் சென்ற போது சாலையில் உள்ள தடுப்புச் சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதையடுத்து கார் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது.

தொடர்ந்து இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக திருத்துறைப்பூண்டி காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அறிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் முற்றிலும் கார் எரிந்து சாம்பலானது.