இந்தியாவின் வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி

இந்தியாவின் வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு மறுநாள் முதல் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என அறிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து, வருகிற 19ஆம் திகதி அந்தமான் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதனால் வரும் நாட்களில் தமிழகத்தில் மழை தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




