சென்னையில் எஸ்.ஐ.ஆர். தொடர்பான சந்தேகங்களை கேட்டறிய 16 உதவி மையங்கள் அமைப்பு

சென்னையில் எஸ்.ஐ.ஆர். தொடர்பான சந்தேகங்களை கேட்டறிய 16 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தகவல் அறிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தற்போது தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைப் பகுதியில் 22 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் கீழ்காணும் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலராக உள்ளார்




