இராணுவ வசமுள்ள துயிலும் இல்லங்கள் விரைவில் விடுவிக்கப்படும்.

தமது பிள்ளைகளான மாவீரர்களை நினைவு கூறுவது அந்த மக்களுக்கு உள்ள உரிமை என தெரிவித்த கடத்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அதற்கு எமது அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் பின் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மாவீரர்களாகிய தமது பிள்ளைகளை நினைவு கூறுவது அவர்களுக்கு உள்ள உரிமை அதை யாரும் தடுக்க முடியாது எமது அரசாங்கமும் அதற்கு பூரண ஆதரவை வழங்கும்.
கடந்த காலங்களில் மாவீரர்களை நினைவு கூறுவதை தடுத்திருக்கலாம் அல்லது இடையூறு செய்திருக்கலாம் நாங்கள் அவ்வாறு செய்யப்போவதில்லை உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது மக்களுக்கு உள்ள உரிமை
வடபகுதியில் சில மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதனை விடுவிப்பதற்குரிய அறிவுறுத்தல்களை பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கியுள்ளார்.
நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் தோழர் அனுரகுமார திசாநாயக்க மக்களின் காணிகள் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பயணித்து வருகிறார்.
அவரின் செயற்பாடு காரணமாக வடக்கில் பாதுகாப்பு தரப்படமிருந்த பொது மக்களின் காணிகள் தொடர்ச்சியாக மக்களிடம் வழங்கப்பட்டு வருகிறது
அது மட்டுமல்லாது ஜனாதிபதி வடபகுதிக்கு மக்கள் வழங்கிய ஆணையின் பிரதிபலனாக அபிவிருத்திகென விசேடமாக பல மில்லியன் ரூபாக்கள் ஒதுக்கப்பட்டு அதற்கான அபிவிருத்தி வேலை திட்டங்கள் விரைவாக இடம் பெற்று வருகின்றன.
எதிர்வரும் 2026 க்கான வரவு செலவுத் திட்டத்திலும் வட பகுதிக்கு என விசேட ஒதுக்கீடுகளை ஜனாதிபதி சமர்ப்பிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என மேலும் தெரிவித்தார்




