SuperTopAds

ஆர்யன் படம் செய்துள்ள வசூல் 4 நாட்களில் இவ்வளவா?

ஆசிரியர் - Editor IV
ஆர்யன் படம் செய்துள்ள வசூல் 4 நாட்களில் இவ்வளவா?

வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால்.

இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் ‘ஆர்யன்’. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

குறித்த படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ‘ஆர்யன்’ படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கடந்த 31ம் தேதி வெளியானது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தநிலையில், ‘ஆர்யன்’ திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது