உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை-ரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து

மகளிர் உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் மகளிர் 50 ஓவர் உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்திய அணிக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் யில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்! இறுதிப்போட்டியில் வீராங்கனைகள் காட்டிய நுணுக்கம், தண்னம்பிக்கை, பாராட்டுக்குரியது.
உலக கோப்பை முழு தொடரிலும் இந்திய வீராங்கனைகள் ஒருமித்த ஒத்துழைப்பு சிறப்பாக எதிரொலித்தது. எதிர்கால பெண் வீராங்கனைகளுக்கும் ஊக்கம் தரும் வெற்றியை இந்திய மகளிர் அணி நிகழ்த்தியுள்ளது” என்று அறிவித்துள்ளார்.




