SuperTopAds

மருதங்கேணியில் வெடிகுண்டுகள் மீட்பு

ஆசிரியர் - Editor II
மருதங்கேணியில் வெடிகுண்டுகள் மீட்பு

மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மண்டலாய் பகுதியில் தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் மூன்று குண்டுகள் இனங்காணப்பட்டுள்ளது 

மண்டலாய் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய காணியில் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த காணிக்குள் குண்டுகள் காணப்படுவதை அவதானித்தார் 

சம்பவம் குறித்து உடனடியாக மருதங்கேணி பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டபோது சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

காணிக்குள் 81-2, RPG 2 ,60 _ 3 ,Dompa 1 ரக குண்டுகள் என இனங்கானப்படுள்ளன இக் குண்டுகள் நாளைய தினம் சனிக்கிழமை நீதிமன்றஅனுமதி பெற்ற பின் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.