SuperTopAds

ஆய்வகத்தில் உருவான இதயம்-அமெரிக்க விஞ்ஞானிகள் அசத்தல்

ஆசிரியர் - Editor IV
ஆய்வகத்தில் உருவான இதயம்-அமெரிக்க விஞ்ஞானிகள் அசத்தல்

அமெரிக்​கா​வின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஆய்வகத்தில் இதயம், கல்​லீரல், இரத்த நாளங்​கள் உள்​ளிட்ட மனித உறுப்​பு​களை செயற்கையாக உரு​வாக்கி புரட்சிகரமான முன்னேற்றத்தை எட்டியுள்ளனர்.

இது தொடர்பில் மருத்துவ துறையின் முன்னணி இதழ்களில் வெளியாகியுள்ள அறிக்கையின்படி, 

ஸ்டெம் செல்கள் (Stem Cells) பயன்படுத்தி செயற்கை இதயம், கல்லீரல் மற்றும் இரத்த நாளங்கள் ஆய்வகத்தில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளன.

வெறும் 16 நாட்களில் மனித இதயம் போன்று துடிக்கும் செயற்கை இதயம் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடன் செயற்கை கல்லீரல் மற்றும் செயற்கை இரத்த நாளங்களும் வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்டுபிடிப்புகள், எதிர்காலத்தில் லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றும் திறன் கொண்டவை.

மனித வளர்ச்சி, நோய் பரவல், மருந்து செயல்திறன் ஆகியவற்றை துல்லியமாகப் புரிந்து கொள்ள உதவும்.

தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவம் மற்றும் பாதுகாப்பான, வேகமான மருந்து கண்டுபிடிப்பு சாத்தியங்களை அதிகரிக்கும்.

ஆனால், மனித இரத்த நாளங்களின் சிக்கலான அமைப்பை முழுமையாக பிரதிபலிக்க இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ உலகில் மிகப் பெரிய புரட்சியாகக் கருதப்படும் இந்த சாதனை, தற்போது உலகளவில் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio