SuperTopAds

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாள் இன்று

ஆசிரியர் - Editor IV
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாள் இன்று

தமிழ் சினிமா உலகில் நடிகர் திலகம் என அன்புடன் அழைக்கப்பட்டவர் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன்.

அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சிவாஜி கணேசன் முத்தமிழறிஞர் கலைஞரின் கதை வசனத்தில் உருவாகிய 'பராசக்தி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ்த் திரைப்பட உலகில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், இந்தி, தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

சிவாஜி கணேசன் "நடிகர் திலகம்", "நடிப்புச் சக்கரவர்த்தி" என்று மக்களாலும், திரை உலகத்தினராலும் அழைக்கப்பட்டார்

நடிகர் திலகத்தின் 98-வது பிறந்தநாள் இன்று திரையுலகினராலும், அவரது குடும்பத்தினராலும், ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள், மேயர் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.