ஆசியக் கோப்பை தோல்வி: பாகிஸ்தானை சாடிய முன்னாள் வீரர்கள்

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து நடந்த கோப்பை சர்ச்சை குறித்துப் பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கடுமையான எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
சிலர் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி குறித்துக் கேள்வி எழுப்பினர், சிலர் இந்திய அணி கோப்பையை ஏற்க மறுத்த முடிவை கிரிக்கெட்டின் உண்மையான உணர்வுக்கு எதிரானது என்று கூறினர்.
துபையில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்து. பாகிஸ்தான் நிர்ணயித்த 147 ரன்கள் என்ற இலக்கை இந்தியா 19.4 ஓவர்களில் எட்டியது. திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 69 ரன்களும், ஷிவம் துபே 33 ரன்களும் எடுத்தனர்.
ஆனால், இந்தப் போட்டிக்குப் பிறகு கோப்பையை வாங்கும் விஷயத்தில் நடந்த சம்பவங்கள் கிரிக்கெட் களத்தில் முன்பு எப்போதும் கண்டிராத நிகழ்வாகும்




