யாழில் அடியோடு அழிந்த 52 வாழை மரங்கள்!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வீசிய பலத்த காற்றுடனான கனமழையால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்.நவக்கிரிப் பகுதியில் மின்னல் தாக்கியதில் , அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் உள்ள மோட்டர் அறை, மோட்டர், மின்சார இணைப்பு என்பன முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த தோட்டத்தில் நின்ற 52 வாழை மரங்களும் அடியோடு அழிவடைந்துள்ளதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.




