SuperTopAds

யாழில் கிணற்றில் தவறி விழுந்த வயேதிபப் பெண் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor II
யாழில் கிணற்றில் தவறி விழுந்த வயேதிபப் பெண் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் வயோதிபப் பெண் ஒருவர் கிணற்றில் தவறி  விழுந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி சீதாலட்சுமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்தவேளை தவறி கிணற்றினுள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.