SuperTopAds

மன்னாரில் ஐஸ் போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

ஆசிரியர் - Editor II
மன்னாரில் ஐஸ் போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

மன்னார் ஐஸ் போதைப்பொருள் குற்றவாளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேசத்தில் 2023 ஆண்டு காலப்பகுதியில் 11 கிராம் தூய நிறையுடைய ஐஸ் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மிஹால் தலைமையில் குறித்த வழக்கு நேற்று முன்தினம் எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் குற்றத்தின் பாரதூர தன்மையை கருத்திற்கு கொண்டு சந்தேகநபருக்கு எதிராக குறித்த  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

Radio