SuperTopAds

வவுனியாவில் புகையிரத விபத்து - தாய், தந்தை, குழந்தை காயம்

ஆசிரியர் - Editor II
வவுனியாவில் புகையிரத விபத்து - தாய், தந்தை, குழந்தை காயம்

வவுனியாவில் புகையிரதத்துடன் , பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில்,  நான்கு வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ். நோக்கி பயணித்த புகையிரதம் வவுனியா பிரதான நிலையத்தை அடைந்ததுடன், அங்கிருந்து புறப்பட்டு , சிறிது நேரத்தில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வாகனத்தில் பயணித்த கணவன், மனைவி மற்றும் அவர்களது நான்கு வயது குழந்தை ஆகியோர், காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் பயணித்த வாகனம் கடும் சேதத்திற்குள்ளாகியது.

இவ் விபத்தினால் அரை மணிநேர தாமதத்திற்கு பின்னரே ரயில் தனது பயணத்தை ஆரம்பித்தது. 

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.