தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை ஆரம்பமாகியுள்ளது.
குறித்த போராட்டமானது நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாலை வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் போராட்டமானது, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.





