SuperTopAds

உங்களின் கரிசனைகளை எனது அறிக்கை பிரதிபலிக்கும்!- பதில் அனுப்பினார் வோல்கர் டர்க்.

ஆசிரியர் - Admin
உங்களின் கரிசனைகளை எனது அறிக்கை பிரதிபலிக்கும்!- பதில் அனுப்பினார் வோல்கர் டர்க்.

தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் சிவில்சமூகத்தினரும் மதத்தலைவர்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கும் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளிற்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கும் அனுப்பி வைத்த கடிதத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் பதில் கடிதத்தை எழுதியுள்ளார்.

தனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கரிசனைகளை பிரதிபலிக்கும் விதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான தனது அறிக்கை இடம்பெற்றிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான தனது விஜயத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் பலருடனான தனது சந்திப்பு மிகவும் உணர்வுபூர்வமானதாக காணப்பட்டது என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செம்மணி மனித புதைகுழிக்கான எனது விஜயமும் பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தரணிகளை சந்தித்தமை அந்த பகுதியில் இடம்பெற்ற பெரும் நினைவுகூரலை பார்வையிட்டமையும் மிகவும் உணர்வுபூர்வமானதாக காணப்பட்டது என தெரிவித்துள்ளார்.

எனது இலங்கை விஜயம் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் 60வது அமர்வு குறித்தும் 14ம் திகதி ஜூலை மாதமும் இஆகஸ்ட் மாதம் நான்காம் திகதியும் நீங்கள் அனுப்பிய கடிதத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது விஜயத்தின் போது உங்களில் சிலரை சந்திக்க முடிந்தமை குறித்தும் இ எனது விஜயத்தின் முன்னரும் பின்னரும் சிவில் சமூகத்திடமிருந்து கிடைம் பல மகஜர்கள் மற்றும் கடிதங்கள் குறித்தும் நான் நன்றியுடையவனாக உள்ளேன்.

கடந்தகால தற்போதைய மனித உரிமை மீறல்களிற்கான சர்வதேச குற்றங்களிற்கான பொறுப்புக்கூறல் எனது விஜயத்தின் முக்கிய நோக்கமாகவும்இஅரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் முக்கிய விடயமாகவும் காணப்பட்டதுமுன்னோக்கி செல்லும்போது இது தொடரும்.

எனது விஜயத்தின்போது எனது அலுவலகத்தின் முன்னைய அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்ட கரிசனைகளை வலியுறுத்தினேன்இதன்போது இராணுவத்தினரின் பிடியில் உள்ள நிலங்களை விடுவித்தலின் அவசியம்வடக்குகிழக்கில் காணிகளை கையகப்படுத்துவதை நிறுத்துதல்பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்துவைத்திருப்பவர்களை விடுதலைசெய்தல்கண்காணிப்பு துன்புறுத்தலை முடிவிற்கு கொண்டுவருதல்பொதுமக்களின் நினைவுகூரும் நடவடிக்கைகளை குற்றமாக கருதுவதை விடுத்து அதற்கு ஆதரவளித்தல் போன்றவற்;றையும் வலியுறுத்தினேன்.

இந்த விடயங்களிற்கு தீர்வை காண்பது பாதிக்கப்பட்ட மக்கள் சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு மிக முக்கியமான ஒரு நடவடிக்கையாகும்.

எனது விஜயத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் பலருடனான தனது சந்திப்பு மிகவும் உணர்வூர்வமானதாக காணப்பட்டது செம்மணி மனித புதைகுழிக்கான எனது விஜயமும் பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தரணிகளை சந்தித்தமை அந்த பகுதியில் இடம்பெற்ற பெரும் நினைவுகூரலை பார்வையிட்டமையும் மிகவும் உணர்வுபூர்வமானதாக காணப்பட்டது

என்னுடைய இந்த விஜயங்கள் மனித புதைகுழிகள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் ஆதாரங்களை பேணவேண்டியது சுயாதீன விசாரணை குறித்து கவனத்தை திருப்பியுள்ளதுடன் அவசரதன்மையை கொடுத்துள்ளன.

இலங்கையின் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் இதுவரை சுயாதீனமான வலுவான நியாயமான பொறுப்புக்கூறும் பொறிமுறைகளை ஏற்படுத்த தவறிவிட்டனர்

பொதுமக்களினதும் சர்வதேச சமூகத்தினதும் நம்பிக்கையை பெறக்கூடிய உண்மை நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான முழுமையான செயல்முறையை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தினை நான் கேட்டுக்கொண்டேன்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான எனது எதிர்வரும் அறிக்கை உங்களின் கரிசனைகளை பிரதிபலிக்கும் விதத்தில் காணப்படுவதை நீங்கள் காண்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.