தமிழரசின் அரசியல் குழு யாழில் கூடியது - முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் சனிக்கிழமை நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது கட்சியின்
இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான விடயங்களை கையாள என கட்சியினால் தெரிவு செய்யப்பட்ட ஏழு பேர் கொண்ட குழுவும் ஒன்று கூடி பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடின.
இக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






