புளியங்குளத்தில் விபத்து - இளம் ஆசிரியர் உயிரிழப்பு

புளியங்குளம் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில், இளம் ஆசிரியர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெயசீலன் துபாகரன் எனும் கணிதபாட ஆசிரியரே உயிரிழந்தவர் ஆவார்.
தனது மோட்டார் சைக்கிளில் பயணித்த போது அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த ஆசிரியர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




