பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு மாலத்தீவில் உற்சாக வரவேற்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு மாலத்தீவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிட்டன் பயணத்தை முடித்துவிட்டு 2 அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவுக்குச் சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தலைமையில், வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் இருந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியை மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடி ஜூலை 26ஆம் திகதி நடைபெறும் மாலத்தீவின் 60வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு மாலத்தீவு தலைநகர் மாலேயில் தெருக்கள் முழுவதும் இந்திய தேசியக் கொடியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.




