SuperTopAds

சர்ச்சைக்குரிய பாட்னருடன் இலங்கை வந்த ரவிமோகன்

ஆசிரியர் - Editor II
சர்ச்சைக்குரிய பாட்னருடன் இலங்கை வந்த ரவிமோகன்

தென்னிந்தியப் பிரபல நடிகர் மற்றும் பாடகி கெனீஷா பிரான்சிஸ் ஆகியோர் நேற்றைய தினம் இலங்கைக்கு வந்துள்ளனர். 

இலங்கையை வந்தடைந்த நடிகர் ரவிமோகன் , பாடகி கெனீஷா ஆகியோருக்கும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது இந்திய திரைப்படங்கள் ஊடாக இலங்கையின் சுற்றுலாத் தளங்களையும், வரலாற்று கதைகளையும் உலகம் முழுவதும் கொண்டு செல்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.