வவுனியாவில் பொலிஸாரினால் உயிரிழந்த இளைஞன்

வவுனியா கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்ற போது அவர் உயிரிழந்துள்ளார்.
இதனால் அப்பகுதியில் பதற்ற சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை போக்குவரத்து பொலிஸார் தாங்கள் வைத்திருந்த தடியை நீட்டி நிறுத்த முயன்றுள்ளனர். அதன் போது இளைஞன் விபத்துக்கு உள்ளாகி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். இளைஞன் உயிரிழந்த இடத்தில் பண்டார என்ற பொலிஸ் உத்தியோகஸ்தரின் பெயர் பட்டியும் காணப்படுகிறது.
இதனால், அப்பகுதியில் அதிகளவான மக்கள் குவிந்துள்ளமையால் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.






